தென்கொரியாவில் விபத்தில் ஒரத்தநாடு இளைஞர் உயிரிழப்பு திருமணம் நிச்சயமான நிலையில் இந்த சோகம் நேர்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கண்ணுகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (32). இவர் தென்கொரியாவில் சியோரா நகரில், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தொழிற்சாலையில் உள்ள ரோபோ ஒன்று, சுதர்சன் மார்பு பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சுதர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து

தென்கொரிய தமிழ் சங்கத்தினர் உதவி மூலம் சுதர்சனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுதர்சன் தென்கொரியாவில் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய ஒருபெண்ணை நிச்சயம் செய்திருந்த நிலையில் சுதர்சன் விபத்தில் சிக்கி இறந்திருப்பது அவரது உறவினர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
