சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நேற்று (செப்.20) இரவு திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவி இன்று தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அருவியில் நீர்வரத்து சீரான பின்னரே சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை
