சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 7,598 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி 8,618 கனஅடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு (12,000 கனஅடி) நீர்வரத்தை விட அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து 88.21 அடியாக சரிந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் வினாடிக்கு 9,786 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
