Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக கொறடா எ.வ.வேலு அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் கடிதம்!

திமுக கொறடா எ.வ.வேலு அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் கடிதம்!

இந்தியாவில் அவசரநிலை அமலில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட ‘மிசா’ சட்டத்தின் கீழ் அப்போதைய அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுப் பல இன்னல்களுக்கு ஆளாகினர். தமிழக அரசியல் வரலாற்றில் மிசா சட்டம் மிக முக்கிய விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது அச்சட்டம் குறித்துப் பேசப்படும் கருத்துகள் அவையில் காரசாரமான விவாதங்களை உருவாக்குவது வழக்கம்.

சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மிசா சட்டம் மற்றும் அதில் கைதான தலைவர்கள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கொச்சையான முறையிலும் அவமதிக்கும் வகையிலும் பேசியதாகத் திமுகத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரின் இந்தப் பேச்சு பேரவையின் மரபுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைச் செயலாளர் சாந்தியை நேரில் சந்தித்த எ.வ.வேலு, அமைச்சர் நிர்மல் குமார் மீது சட்டப்பேரவை விததிகளின் கீழ் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரும் கடிதத்தை வழங்கினார். இந்த மனுவின் மீது பேரவைச் சபாநாயகர் ஆய்வு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link