நீலகிரி: கூடலூரில் 2 பேரை அடித்துக்கொற ஆட்கொல்லி புலி, 28 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் பகுதியில் ஆகஸ்ட் மாதம் 2 பேரை புலி தாக்கிக் கொறது. புலியை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது புலி சிக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
