சிறுகோள் மோதியதால் நிலவின் முன்பகுதியில் உருவான 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்ட புதிய பள்ளத்தை நாசாவின் ‘லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர்’ விண்கலம் கண்டறிந்துள்ளது. 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த மோதலால் அச்சப்படத் தேவையில்லை என்றும், எதிர்காலத்தில் நாசா அமைக்கவுள்ள நிலவுத் தளத்தின் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் பாதுகாப்பு திட்டங்களுக்கும் இந்த ஆய்வு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
