சேலம்: மேட்டூர் அணைக்கு 9,930 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 10,453 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 86.70 அடியாகவும், நீர் இருப்பு 48.958 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
