தமிழ்நாட்டில் பருவகால மாற்றத்தால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மழைநீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேங்கும் மழைநீரை முறையாக அகற்றாத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். மழைநீர் தேங்கும் இடங்களில் கொசு உற்பத்தியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
