Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்ப தகராறு…மருமகளை கடப்பாறையால் அடித்து கொன்ற மாமனார்

குடும்ப தகராறு... மருமகளை கடப்பாறையால் அடித்து கொன்ற மாமனார்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை புத்தூர் மணக்கொல்லை பகுதியை சார்ந்தவர் சிவசாமி (65) விவசாயி, இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராஜா என்பவருக்கு வனவள்ளியுடன் திருமணம் நடைபெற்று தேவராஜ் என்ற மகன் உள்ளார்.மூத்த மகன் ராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

அதன் பிறகு இளைய மகன் ராமுவுடன் வனவள்ளியை மறுமணம் செய்துவைத்துள்ளனர். இவர்களுக்கு லோகேஷ் என்ற மகன் பிறந்த நிலையில் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். வனவள்ளியின் கணவர் ராமு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்துகொண்டு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். இந்நிலையில் வனவள்ளியின் மாமியார் மலர்கொடி மணக்கொல்லை கிராம கோயிலில் அளித்த பிரசாதத்தை வாங்கி வந்து கணவர் சிவசாமிக்கு வைத்திருந்த பொழுது வனவள்ளி வளர்த்து வந்த நாய் சாப்பிட்டதனால் மாமியார் மருமகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனை காரணமாக மதுபோதையில் இருந்த சிவசாமி தனது மருமகள் வனவள்ளியை
கடப்பாறையில் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து உள்ளார்.
இத்தகவலின் பெயரில் பாபநாசம் காவல்துணை கண்காணிப்பாளர் முருகவேல், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைபற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வள்ளியின் மூத்த மகன் தேவராஜ் கொடுத்த புகாரின்
பேரில் அம்மாபேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மருமகளை கொலை செய்த சிவசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!