தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்; தினசரி சராசரியாக 200 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் சுகாதாரமின்மை நிலவுவதாகவும் 250-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. எனினும், மாணவர்கள் உயிரிழப்பு ‘ஸ்கர்ப் டைபஸ்’ தொற்றால் நிகழ்ந்ததாகச் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
