திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக பாஜக பெண் நிர்வாகி திவ்யா சேஷாத்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து, கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில பொதுச் செயலராக இருந்த அவர், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில், பாஜக OBC அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த புகார் அளித்த பெண் நிர்வாகியும் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
