பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் மற்றும் ஆலத்தூர் சுற்றுவட்டாரங்களில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து. வந்த நிலையில்,நண்பகலுக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வெளுத்து வாங்கியதால் மானாவாரி விதைப்புக்காக வானத்தை அண்ணாந்து பார்த்து காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியிலுள்ளனர். மேலும், ஆலத்தூர் தாலுகாவில் பரவலாக பெய்து வரும் இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
