ஜனவரி வரை SCRUB TYPHUS என்ற உண்ணி காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தகவல்.
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, சோர்வு, வறட்டு இருமல் மற்றும் பசியின்மை ஆகியவை முதன்மை அறிகுறிகள்.
டெங்கு காய்ச்சலை போன்றே அறிகுறிகள் இருந்தாலும், இதில் தலைவலி சற்று அதிகமாக இருக்கும்.
சிலருக்கு பூச்சி கடித்த இடத்தில் சிறிய புண்/சிரங்கு அல்லது நிணநீர் முடிச்சுகள் வீங்குதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
