Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சி அருகே SBI வங்கியில் கொள்ளை முயற்சி- பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கோவிலூரில் (SBI) பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

வங்கிக்குள் நுழைந்த அவர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் இந்த அலாரம் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வங்கியில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார், வங்கிக்கு சென்று கைரேகை நிபுணர்களுடன் தடயங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வங்கியில் முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!