Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை அம்பிகா மீது தங்கை ராதா கண்ணீர்மல்க புகார்

நடிகை அம்பிகா மீது தங்கை ராதா கண்ணீர்மல்க புகார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளாக ஒரு காலத்தில் வலம் வந்த மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகிய சகோதரிகளுக்கு இடையே திடீர் மோதல் வெடித்துள்ளது.
நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் தனது சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அவர்கள் இருவரும் சேர்ந்து சுமார் ரூ.46 கோடி அளவிற்குத் தன்னிடம் செக் மோசடி செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இப்புகார் குறித்துப் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்ஜிஆர் திறந்து வைத்த ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோ பின்னணி
சென்னை அருகே அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் தாய் சரசம்மா ஆகிய மூவரின் பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஏஆர்எஸ் கார்டன் என்ற பிரமாண்ட ஸ்டுடியோ தொடங்கப்பட்டது.

அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் இந்த ஸ்டுடியோவைத் திறந்து வைத்தார்.

தற்போது பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நடைபெறும் இந்த கார்டன் நிலத்தை எம்ஜிஆர் இலவசமாக வழங்கியதாக ஒரு தகவலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த சொத்துதான் தற்போதைய சர்ச்சையின் மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளது. தாயின் பங்கு சொத்து மற்றும் நில விற்பனை குறித்த மனக்கசப்பு இந்த ஏஆர்எஸ் கார்டன் சொத்தில் சகோதரிகள் இருவருக்கும் அவர்களின் தாய்க்கும் சம பங்கு உள்ளது. தாய் மறைந்த நிலையில், அவரது பங்கு யாருக்கு சேர வேண்டும் என்பதில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு தரப்பினர் நிலத்தை விற்க முயன்ற நிலையில், “இந்த நிலம் விற்பனைக்கு அல்ல” என இருதரப்பும் போட்டி போட்டு விளம்பரப் பலகைகளை வைத்தன. இதனால் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்த சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சனை தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகால அக்கா-தங்கை பாசத்தில் விரிசல்
1979-இல் அறிமுகமான அம்பிகாவும், அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமான ராதாவும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொடிகட்டிப் பறந்தனர்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாகப் திரையுலகில் இணைபிரியாத சகோதரிகளாக வலம் வந்த இவர்கள் இடையே, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை காரணமாக இப்படிப் பகிரங்க மோதல் ஏற்பட்டுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!