Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இசைக் கலைஞர் திடீர் சாவு… விசாரணை

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சி பொன்மலைப்பட்டி கான்வென்ட் தெருவை சேர்ந்தவர் எட்வர்ட் சனா ரோஸ் (53) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் இசை கலைஞராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சர்க்கரை நோய் இருந்த காரணத்தால் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருடைய வலது கால் விரல் சர்க்கரை நோய் காரணமாக துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 20ந் தேதி வீட்டில் இருந்த எட்வர்ட்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இநையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதியோர் இல்லத்தில் மூதாட்டி தவறி விழுந்து சாவு

திருச்சி செப் 22- திருச்சி கே கே நகரில் முதியோர் இல்லம் உள்ளது இதில் 83 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 19 ந்தேதி அவர் அலமாரியை திறந்து கொண்டு இருந்தார். அப் பொழுது திடீரென்று எதிர்பாராதமாக கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த முதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவர் இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!