Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திடீரென டயர் வெடிப்பு… திருப்பதி பாதையில் பரபரப்பு!

ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் டயர் வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் (APSRTC) சொந்தமான பேருந்து ஒன்று, மதனபல்லெ பணிமனையில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திருப்பதி – மதனபல்லெ நெடுஞ்சாலையில், வால்மீகிபுரம் மண்டலம் விட்டலம் கிராமம் அருகே பேருந்து அதிவேகமாக வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

டயர் வெடித்த அதிர்ச்சியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த தடுப்பைக் கடந்து கால்வாய் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தனர். இதில் 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்த மதனபல்லெ பகுதியில் இருந்து விரைந்து வந்த இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.

முதலில் அனைவரும் வால்மீகிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், தீவிர காயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக மதனபல்லெ மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!