உக்ரைன் அருகே கருங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான ஒடிசா அருகே, அன்டிகுவா மற்றும் பார்படா நாட்டு கொடியுடன் சென்ற கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கப்பலில் தீ ஏற்பட்ட நிலையில், அதன் கேப்டன் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
