Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது... திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி, ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது திருவரங்கம் மூலதோப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (வயது 30) பாரதி தெருவை சேர்ந்த ரெங்கநாதன் (25)ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.இவர்களில் தினேஷ் பாபு ரவுடி பட்டியலில் உள்ளார்.

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது 45 வயது மதிக்கத்தக்க
ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த பெண் மற்றும் தனுஷ், கார்த்திக் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்ஜி நகர் பெண்ணை கைது செய்துள்ளனர்.மேலும் தனுஷ் கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.

காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது

திருச்சி செப்23 – திருச்சி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வார்டு பகுதியில் காப்பர் வயர்ரை மர்ம ஆசாமி யாரோ திருடி சென்றுள்ளனர் இது தொடர்பாக அரசு மருத்துவமனையின் உதவி மெடிக்கல் அதிகாரி டாக்டர் குருநாதன் அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாராநல்லூர் வீரமா நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 26) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ காப்பர் வயரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ 9 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக காவல்துறையினர் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி ஆய்வு மற்றும் சோதனை நடத்தி புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது பெரிய கேள்விக்குறியாகவும்,சவாலாகவும் போலீசாருக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி ஏர்போர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராணி மாரியம்மன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஏர்போர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது அங்கிருந்த
இரண்டு வாலிபர்கள் போலீஸ் வருவது தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து
ஏர்போர்ட் போலீஸ் விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், தியாகராஜன் ஆகிய இரண்டு பேர் வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர். மேலும்போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி அங்கிருந்த ரூ3 லட்சம் மதிப்புள்ள 313 கிலோ புகையிலை பொருட்களை மற்றும் ரூ 60 ஆயிரம் பணத்தையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு மகாலட்சுமி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்பட்டுவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துபோலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரன் சிங் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.மேலும் இவருக்கு பொன்மலை பட்டியை சேர்ந்த தமிழகன் என்பவர்ரைபோலீசார் தேடி வருகின்றனர். பிறகு போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த
மகேந்திரன் சிங் யை
கைது செய்து அவரிடமிருந்து 251 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்து 97 ஆயிரம் ஆகும். இவர் பயன்படுத்தியகாரையும், பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!