Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவாகரத்து வழக்கு.. மாமனாரை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

விவாகரத்து வழக்கு.. மாமனாரை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

சென்னை செனாய்நகரைச் சேர்ந்த விஜயகுமாரின் மகள் பிரீத்திக்கும், கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜித்துக்கும் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரீத்தி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மனைவி பிரிந்ததற்கு மாமனாரே காரணம் என ஸ்ரீஜித் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மாமனார் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஏர் துப்பாக்கியால் விஜயகுமாரை நோக்கி 2 முறை சுட்டுள்ளார். குண்டுகள் சுவரில் பட்டதால் அவர் காயமின்றி தப்பினார். புகாரின்பேரில் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!