தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி பீட்டருக்கும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானராஜுக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேவாலயம் அருகே பைக்கில் சென்ற பீட்டரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துப்பாண்டி (21), செந்தில்ராஜன் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
