Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சார்ஜாவில் கர்நாடக தொழிலாளி 9 துண்டுகளாக வெட்டிக் கொலை

சார்ஜாவில் கர்நாடக தொழிலாளி 9 துண்டுகளாக வெட்டிக் கொலை

கர்நாடகாவைச் சேர்ந்த நபர் சார்ஜாவில் 9 துண்டுகளாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு காரில் வீசப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரத்தைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா விமான நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி டினா குந்தர், அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்து சென்ற ஆல்வின் பிரகாஷ், பின்னர் பணிக்குத் திரும்பினார். இந்நிலையில், கடந்த ஜூலை 20ம் தேதி ஆல்வின் பிரகாசை அவரது சகோதரர் அனில் பிரசாந்த் குந்தர் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. மாறாக, தான் நலமாக இருப்பதாக மட்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. வழக்கத்திற்கு மாறாக இந்த தகவல் வந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், சார்ஜாவில் இருந்த நண்பர் மனோகரிடம் நேரில் சென்று விசாரிக்குமாறு கூறியுள்ளனர்.

ஆல்வின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவர் இந்தியா சென்றுவிட்டதாக காவலாளி தெரிவித்துள்ளார். நிறுவனமும் ஆரம்பத்தில் அவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டதாகக் கூறியது. ஆனால், அவர் குடும்பத்தினரிடம் வந்து சேராததால் சந்தேகம் அடைந்து பாஸ்போர்ட் பதிவுகளைச் சோதித்தபோது, அவர் இந்தியாவிற்கு வரவில்லை என்பதும் சார்ஜாவிலேயே தங்கியிருப்பதும் உறுதியானது. இதையடுத்து அவர் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், ஓமன் செல்லும் சாலையில் அனாதையாக நின்றிருந்த ஒரு காரில் 2 பைகளில் 9 துண்டுகளாக வெட்டிப் பொட்டலம் கட்டப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆல்வின் பிரகாசின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொடூரக் குற்றத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது கிடைத்ததையடுத்து, அனில் பிரசாந்த் உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்துப் புகார் மனு அளித்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு ஆல்வினின் மனைவியும் மகனும் எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியாமல் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து அவரது சகோதரர் அனில் கூறுகையில், ‘நெஞ்சில் குத்தி, ஒருவரது உடலை 9 துண்டுகளாக வெட்டுவதற்கு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர்களால் மட்டுமே முடியும்; அவரது மனைவிக்கு இதில் என்ன நடந்தது என்று கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அவசரமாக வெளியேறும் சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!