திருச்சியிலிருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு வளாகத்திற்குள் புகுந்தது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் தொட்டியம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 சைக்கிள்கள் சேதமடைந்த நிலையில், டிரைவர் ஹரிஹரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
