Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் காற்று மாசுமிதமான அளவில் பதிவு

தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் காற்று மாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. எனினும், காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ அளவிலேயே நீடிப்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போதும், அதற்கு அடுத்த இரு தினங்களிலும் பட்டாசுகள் மற்றும் மத்தாப்புகள் அதிகளவில் வெடிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக திருச்சியில் புகையின் தாக்கம் அதிகரித்து, காற்றின் தரம் தற்காலிகமாக சரிவடைந்துள்ளது.மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின்படி, திருச்சியில் தற்போதைய காற்றின் தரக் குறியீடு 180 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

பட்டாசு புகையினால் நகரின் பல பகுதிகளில் காற்று மாசு வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டாலும், இந்த 180 என்ற குறியீடானது ‘மிதமான மாசு’ என்ற வரம்பிற்குள்ளேயே வருவதால், பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை காலத்தில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டாமல், கட்டுப்பாட்டுக்குள் இருப்பதே திருச்சி வாழ் பொதுமக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.

error: Content is protected !!