ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரின் சோனாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்து நின்ற லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஜார்கண்ட் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகளும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
