திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கத்தில் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், சின்ன கோலடியைச் சேர்ந்த பாஸ்கரன் (44) என்பதும், சென்ட்ரிங் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று பாஸ்கரனும் அவரது நண்பர் சரவணன் (37) என்பவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சரவணன், பாஸ்கரனை கிணற்றில் தள்ளியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்தனர்
மதுபோதையில் தகராறு.. நண்பரை கிணற்றில் தள்ளி கொலை
