தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி அக்டோபர் 1 அன்று தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பிற தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளைப் புறந்தள்ளி, பாஜக ஆதரவுடன் தன்னிச்சையாகச் செயல்பட்டு 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு மோடியும், அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தலையிடவும் வலியுறுத்தியுள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி அக்.1-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
