அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தென்னகத்தின் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம்.
அரியலூர் மட்டுமில்லாமல் தஞ்சாவூர், சேலம், மயிலாடுதுறை, பெரம்பலூர், கும்பகோணம், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்

அதிகாலை முதலே வந்து அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கலியுக வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். வரதராஜ பெருமாளை தரிசனம் செய்யும் பொழுது “கோவிந்தா” “கோவிந்தா”

என்ற பக்த கோஷங்களும் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தங்கள் வயலில் விளைந்த நெல், சோளம், வரகு, கம்பு உள்ளிட்ட தானிய வகைகளையும் ஆடு, மாடுகளையும் கொண்டு வந்து கலியுக வரதராஜ பெருமாள் ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தி தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற்றி வழிபட்டனர்.
மேலும் உற்சவர் ஆன ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு அலங்காரங்கள்

செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் கோவிலுக்கு, அரசு சார்பில் சிறப்பு

பேருந்துகள் இயக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த வாரம், பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
