புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமை தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் நடை திறக்கப்பட்டது பின்னர் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையொட்டி, அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் ஆலயத்திற்கு வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், பக்தர்கள் திருமுடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையை ஒட்டி, தான்தோன்றிமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
