Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“12 எம்எல்ஏக்களுக்கு 2 திருமணம்!” –சட்டசபையில் டி.கே. சிவக்குமார் பேச்சு

கர்நாடக சட்டசபையில் பெங்களூருக்கு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு 2 மனைவிகள் இருப்பதாக டி.கே.சிவக்குமார் பேசியது பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. கர்நாடக சட்டசபையில் வறட்சி நிலை மற்றும் பெங்களூரு நகரின் கட்டமைப்பு நெருக்கடிகள் தொடர்பான விவாதம் கடந்த சில நாட்களாக அனல் பறந்து வந்தது. இந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார், பெங்களூருவின் மக்கள் தொகை 33 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக உயர்ந்துள்ள சூழலை விவரித்தார்.

அப்போது வழக்கத்திற்கு மாறாக மக்கள் பிரதிநிதிகளை விமர்சித்த அவர் பேசுகையில், ‘கெம்பேகவுடா பெங்களூருவை உருவாக்கினார்; கெங்கல் அனுமந்தையா விதான சவுதாவை கட்டினார்; எஸ்.எம்.கிருஷ்ணா இந்த நகரை சர்வதேச நகரமாக மாற்றினார். வெளியூர்களில் இருந்து இந்த நகருக்கு வருபவர்கள் யாரும் திரும்பிச் செல்வதில்லை. இங்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதில்லை. அப்படி பெங்களூருவுக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். தார்வாட், தட்சிண கன்னடா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 12 எம்.எல்.ஏ.க்கள் இரு குடும்பங்களை நடத்துகின்றனர்.

தேவைப்பட்டால் அவர்களின் பெயர் பட்டியலையே என்னால் தர முடியும்’ என்று அதிரடியாகத் தெரிவித்தார். சட்டசபை வளாகத்திலேயே மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, ‘வெளியூரில் இருந்து வரும் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தலைக்கு தொங்கும் கத்தியாக இந்த பேச்சு அமைந்துள்ளது; எனவே சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை சிவக்குமார் உடனடியாக பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என்று ஆவேசமாக வலியுறுத்தினார்.

ஆளும் தரப்பின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அவையின் கண்ணியத்தை காக்க அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பட்டியலை வெளியிட வேண்டும் என்ற நெருக்கடி எழுந்துள்ளது.

error: Content is protected !!