கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டின் கதவை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் 118 பவுன் தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட இசக்கி பாண்டி என்பவரையும், நகைகளை விற்க உதவிய முருகன் மற்றும் முருகேசன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
யூடியூபர் மதுமிதா வீட்டில் கொள்ளையடித்தவர் கைது: ரூ.1 கோடி நகைகள் மீட்பு
