Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் ரகளை- கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் “அட்ராசிட்டி”

டாஸ்மாக் ரகளை- கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் "அட்ராசிட்டி"

“வார இறுதியில் டாஸ்மாக் ரகளை” – காளப்பட்டியில் வடமாநிலத் தொழிலாளர்களின் அட்ராசிட்டி: குறுந்தொழில் முனைவோர் வேதனை!

சாலையில் வாகனங்களை மறித்து அடிதடி: இணையத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

​ கோவை, காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் மது அருந்தி விட்டுச் சாலையில் வீணாகத் தகராறில் ஈடுபட்டு, வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்திற்கு பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கிக்

குறுந்தொழில் மற்றும் ஆடை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

​இங்கு உள்ள பல நிறுவனங்களில் சனிக்கிழமைகளில் வாரச் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் சில வடமாநிலத் தொழிலாளர்கள், டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டுப் பொதுமக்களுக்கு

இடையூறாகத் தகராறில் ஈடுபடுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காளப்பட்டி பகுதி டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்திய வடமாநிலத் தொழிலாளர்கள் குழு ஒன்று, போதையில் நேரு நகர் பிரதான சாலையில் சென்று கொண்டு இருந்த வாகனங்களை மறித்துத் தகராறில் ஈடுபட்டு உள்ளது.

​தங்களுக்கு உள்ளேயே கூச்சலிட்டுப் பயங்கரமாகத் தாக்கிச் சண்டையிட்டுக் கொண்ட இந்த அராஜகக் காட்சிகளை அப்பகுதி மக்கள் செல்போனில் பதிவு செய்து உள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறுபுறம், வடமாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், விநாயகர் சதுர்த்தி போன்ற தொடர் பண்டிகைகளைக் காரணம் காட்டித் தாய்நாட்டிற்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் மீண்டும் வேலைக்குத் திரும்புவதில் கடும் தாமதம் காட்டி வருகின்றனர்.

​இதனால் உற்பத்திப் பணிகள் முடங்கி, குறித்த நேரத்தில் ஆர்டர்களை முடிக்க முடியாமல் கடுமையான நிதி இழப்பையும் நஷ்டத்தையும் சந்தித்து வருவதாகக் கோவை மாவட்டக் குறுந்தொழில் முனைவோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

​சட்டம் – ஒழுங்குப் பிரச்னையை உருவாக்கும் வகையில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் உள்ளூர் மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

error: Content is protected !!