Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அவிநாசி சாலையில் பைக் வீலிங் – வாகன ஓட்டிகள் அச்சம்

அவிநாசி சாலையில் பைக் வீலிங் – வாகன ஓட்டிகள் அச்சம்

“அவிநாசி சாலையில் பைக் வீலிங் அட்ராசிட்டி!” – நள்ளிரவில் போட்டி போட்டுக் கொண்டு ஆபத்தான சாகசம்: கதிகலங்கும் வாகன ஓட்டிகள்!

​ கோவை, அவிநாசி சாலையில் இரவு நேரங்களில் வாலிபர்கள் சிலர் போட்டி, போட்டுக் கொண்டு அதிவேகத்தில் பைக் வீலிங் (Bike Stunt / Wheeling) மற்றும் ஆபத்தான ரேஸ்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கோவையின் பிரதான மற்றும் மிக முக்கியப் போக்குவரத்துப் பாதையான அவிநாசி சாலையில், நள்ளிரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்ததும் சில இளைஞர்கள் குழுவாகச் சேர்கின்றனர். உருமாற்றம் செய்யப்பட்ட (Modified) அதிவேகப் பைக்குகளில் வரும் இந்த

வாலிபர்கள், அவிநாசி சாலை மேம்பாலம் மற்றும் லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, அண்ணா சிலை போன்ற பிரதான பகுதிகளில் போட்டி, போட்டுக் கொண்டு பைக் வீலிங் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலையின் நடுவே ஒற்றைச் சக்கரத்தைத் தூக்கிக் கொண்டு அதிவேகமாகச் செல்வது, மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மிக அருகில் உரசியபடி முந்திச் செல்வது என ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

​இரவு நேரத்தில் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பும் வாகன ஓட்டிகள் மற்றும் குடும்பத்துடன் செல்வோர், இந்த வாலிபர்களின் சட்டவிரோதச் செயல்களால் எந்த நேரத்தில் என்ன விபத்து நேருமோ ? என்ற பீதியிலேயே அவிநாசி சாலையைக் கடந்து செல்லும் சூழல் உருவாகி உள்ளது.

ஏற்கனவே கோவையின் பல்வேறு பகுதிகளில் பைக் ரேஸ் மற்றும் வீலிங்கில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்து வரும் நிலையில், நள்ளிரவு நேரங்களில் அவிநாசி சாலையில் ‘ரோந்து’ பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

​பொதுமக்களின் உயிருக்கும், சொந்த உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் வீலிங்கில் ஈடுபடும் நபர்களைச் அடையாளம் கண்டு, அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை (Driving License) ரத்து செய்வதோடு, வாகனங்களைப் பறிமுதல் செய்து கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

error: Content is protected !!