திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அக்.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் VIP தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாதாரண மற்றும் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அனைவரும் விரைவாகவும் சிரமமின்றியும் சாமி தரிசனம் செய்யும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால் அந்த நாட்களில் பரிந்துரை கடிதங்கள் எவையும் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்.1, 5-ல் VIP தரிசனம் ரத்து
