திருவாரூர் மேட்டுப்பாளையத்தில் நெஞ்சு எரிச்சலுக்காக மருந்தகத்திற்கு மாத்திரை வாங்கச் சென்ற நபர் ஒருவர், கடையின் வாசலிலேயே திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க சென்றவர் மயங்கி விழுந்து பலி
