Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் 6 இடங்களில் SIU அதிகாரிகள் திடீர் சோதனை

தஞ்சையில் 6 இடங்களில் SIU அதிகாரிகள் திடீர் சோதனை

தஞ்சையில் ஆறு இடங்களில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 6 முக்கிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் சில தனிநபர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) சோதனை நடத்தியது. தஞ்சாவூர் நகர டிஎஸ்பி சார்லஸ் மேற்பார்வையில், ஆறு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனித்தனி குழுக்கள் மூலம் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தஞ்சாவூரைச் சேர்ந்த முக்கிய 6 நபர்களின் வீடுகளில் இந்த சோதனை ஒரே நேரத்தில் அதிகாலை நடைபெற்றது. தஞ்சை கீழவாசல், எஸ்.எம்.எம் நகர், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் ஜாகிர் உசேன், அப்துல், வக்கீல், உமர் முக்தார், யாசர் அப்துல், மற்றும் சம்சுதீன் ஷேக் ஆகிய 6 நபர்களின் வீட்டில் SIU அமைப்பினர் சோதனை நடைபெற்றது.

மேலும், சந்தேகப்படும் நபர்களின் செல்போன், லேப்டாப்களில் சிறப்பு புலனாய்வு அமைப்பினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற சோதனைகள் பொதுவாக ISIS அல்லது Hizb-ut-Tahrir போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொள்கைகளைப் பரப்புபவர்கள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி அல்லது ஆதரவு அளிப்பவர்களைக் கண்டறியவே நடத்தப்பட்டுள்ளன. அதேபோல், இந்தச் சோதனையும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தொடர்பை முறிக்கும் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!