சென்னை உயர் நீதிமன்ற தலை மைப் பதிவாளர் தீப்தி அறி வுநிதி பிறப்பித்துள்ள உத்தர வில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் 8 சிறப்பு நீதிமன்றங்கள், சீனியர் சிவில் நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்து மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதையடுத்து அந்த 8 நீதிமன்றங்களுக்கும் மாவட்ட நீதிபதிகள் நியமிக் கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட முதன்மை
நீதிபதி டாக்டர் எல்.எஸ்.சத்தியமூர்த்தி, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை எஸ்சி, எஸ்டி வன் கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய ஆர்.விவேகானந்தன்- கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி யாகவும், ராமநாதபுரம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பி.சாந்தி திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், மதுரை 3-வது கூடுதல் தீண்டாமை ஒழிப்பு நீதி மன்ற நீதிபதி ஆர்.ஜோசப் ஜாய் மதுரை ஊழல் தடுப்பு சிறப்பு
நீதிபதியாகவும், அரியலூர் மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி என்.ஸ்ரீராம் – விழுப்புரம்
ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி யாகவும், சேலம் வணிக நீதி மன்ற மாவட்ட நீதிபதி ஆர். தோத்திரமேரி – சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாக வும், சிவகங்கை மகளிர் நீதி மன்ற அமர்வு நீதிபதி வி.ராமலிங்கம் -சிவகங்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், திருநெல்வேலி 2-வது கூடுதல் தீண்டாமை ஒழிப்பு அமர்வு நீதிபதி எஸ்.ஹேமா – திருநெல் வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தென்காசியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத் துக்கு, தென்காசியில் கூடுதல் அமர்வு நீதிபதியாகப் பணி புரிந்த எஸ்.மனோஜ்குமார் மாவட்ட அமர்வு நீதிபதியாக வும், தென்காசி புதிய எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்துக்கு தூத்துக் குடியில் பணியாற்றிய அமர்வு நீதிபதி பி.வி.வஷீத்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
