Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் நில மோசடி வழக்கு- திமுக நிர்வாகி அதிரடி கைது

ஸ்ரீரங்கம் நில மோசடி வழக்கு- திமுக நிர்வாகி அதிரடி கைது

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த வழக்கில் திமுக பகுதிச் செயலாளர் எம்.ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலுக்கு சொந்தமான  50 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் இடத்தை ஆக்கிரமித்து திமுக தேர்தல் அலுவலகம் அமைத்த திருச்சி ஸ்ரீரங்கம் திமுக நிர்வாகி ராம்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் திமுக அமைச்சர் சேகர்பாபுவின் பினாமி என்பது குறிப்பிடத்தக்கது. ஜாமீன் கோரி ராம்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.50 கோடி மதிப்பிலான 7,515 சதுர அடி நில விவகாரத்தில், திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!