ஜப்பான் நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக தடகள வீரர்கள் வித்யா, விஷால், அபிநயா, பரணிகா மற்றும் கிரிக்கெட் வீராங்கனை கமலினி ஆகியோர் நேற்று இரவு சென்னை திரும்பினர். விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் தடகள விளையாட்டு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதக்கம் வென்று பெருமை சேர்த்த இவர்களுக்கு முதல்வர் விஜய் ஏற்கெனவே ஊக்கத்தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
