தஞ்சாவூரில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தி உருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை செய்தார்.
காந்தி தாத்தா என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியடிகளின் 158வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூரில் கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும்

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் முன்னாள் ராணுவத்தினர் மாளிகையில் உள்ள காதி கிராப்டில் காந்தி உருவப்படத்தை மாவட்ட ஆட்சியர் ரேவதி திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், அதைத்தொடர்ந்து தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட

ஆட்சியர் தொடங்கி வைத்தார், இங்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி ஜரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவை புத்தம் புதிய வடிவமைப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன, அனைத்து கதர் பாலியஸ்டர் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
