Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 3வயதில் 15 கி.மீ இடைவிடாத ஸ்கேட்டிங்… உலக சாதனை

கரூரில் 3வயதில் 15 கி.மீ இடைவிடாத ஸ்கேட்டிங்... உலக சாதனை

3.6 வயதில் 15 கி.மீ. இடைவிடாத ஸ்கேட்டிங்! கரூர் சிறுவன் அஸ்வந்த் உலக சாதனை உறவினர்கள் பொதுமக்கள் பாராட்டு.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட படிக்கட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த நித்யா – பிரகாஷ் தம்பதியினரின் மகனான அஸ்வந்த் வயது 3 வயது ஆறு மாத குழந்தை ஸ்கேட்டிங் மீதான

ஆர்வத்தால் பெற்றோர்கள் ப்ளூ பாந்தர் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி சேர்த்துள்ளனர் தொடர்ந்து.
குழந்தையின் ஸ்கேட்டிங் ஆர்வத்தின் காரணமாக நோபல் உலக சாதனையில் பங்கேற்றார்.

இன்று காலை 6 மணி முதல் ஒன்றரை மணி நேரம் ஸ்கேட்டிங், கரூர் குளத்துப்பாளையத்தில்

இருந்து செம்மடை வரை இரவிடாமல் 2 முறை சுற்றி வந்து 15 கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாமல் கடந்து அசத்தியுள்ளார்.

புதிய சாதனை முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம்

சார்பில் சிறுவன் அஸ்வந்துக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். இளம்

வயதிலேயே சாதனை படைத்த கரூர் சிறுவன் அஸ்வந்துக்கு பெற்றோர், பயிற்சியாளர்கள்

மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!