இடை தேர்தலுக்காக தவெக வினர் இரண்டு தொகுதிகளிலும் டிபன் பாக்ஸ் மூலம் பரிசுகளும் அதற்குள் பணத்தை வைத்தும் மக்களுக்கு பண பட்டுவாடா செய்து வருகிறார்கள்
வாக்குறுதியின் படி கேஸ் சிலிண்டர் ஆறு எனக் கூறி மூன்று மட்டுமே கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளார்கள். ஆட்சியில் அமரவே இது போன்ற பொய் வாக்குறுதிகளை தெரிவித்து ஆட்சியைப் பிடித்துள்ளனர்
முதலமைச்சரின் தனி பிரிவுக்கு கொடுத்த மனுக்கள் சரியாக பார்க்கப்படவில்லை மக்களுக்கான குறைகளை சரி செய்யவில்லை என மக்கள் தெரிவித்து வருகின்றனர்
தமிழிசை சௌந்தரராஜன்
மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலையை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அப்போது பேசிய அவர்
இடைத்தேர்தல் மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை திசைத்திருப்ப இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.. இடை தேர்தலுக்காக தவெக வினர் இரண்டு தொகுதிகளிலும் டிபன் பாக்ஸ் மூலம் பரிசுகளும் அதற்குள் பணத்தை வைத்தும் மக்களுக்கு பண பட்டுவாடா செய்து வருகிறார்கள்..
தவெக அமைச்சர்கள் இன்னும் பல இடைத்தேர்தல்களை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார்கள்.. இது சரியான அணுகுமுறை கிடையாது..
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு முழுமையான பாதுகாப்பு தேவைப்படுகிறது.. அதை இந்த அரசாங்கம் தவறாக செயல்படுத்துகிறது..
முதலமைச்சரின் தனி பிரிவுக்கு கொடுத்த மனுக்கள் சரியாக பார்க்கப்படவில்லை மக்களுக்கான குறைகளை சரி செய்யவில்லை என மக்கள் தெரிவித்து வருகின்றனர்..
முதலமைச்சர் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.. திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் தவிர தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.
வாக்குறுதியின் படி கேஸ் சிலிண்டர் ஆறு எனக் கூறி மூன்று மட்டுமே கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளார்கள்.ஆட்சியில் அமரவே இது போன்ற பொய் வாக்குறுதிகளை தெரிவித்து ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக ஆட்சி நிலைக்காத என்ற கேள்விக்கு
தவெக வினர் கூட்டணி கட்சியில் இருப்பவர்களே அதிகமாக பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குவது தவெக வினர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் போன்ற முக்கிய தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களை தவெக வினர் விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள்..
10 லட்சம் லிட்டர் பால் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது பால் தட்டுப்பாடு தமிழகத்தில் அதிக அளவு ஏற்பட்டுள்ளது.
தேவையான பாலை வழங்கவில்லை ஆனால் மக்களுக்கு கேடான மதுபானம் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது.
அரசாங்க ஊழியர்கள் அதிக அளவில் போராடும் நிலை இந்த ஆட்சியில் உள்ளது.
மதுபான பாட்டில்களுக்கு முக்கியத்துவம் தரும் இந்த அரசு மக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
மதுபான கடைகள் குறைக்கப்படுமே மட்டுமே கூறிய அவர்கள் மதுபான கடைகளை விரிவுபடுத்தி தான் வருகிறார்கள்..
தாய் மாமன் தங்க மோதிரம் போடலாம் ஆனால் அந்தத் தாய் மீதும் குழந்தை மீதும் பாதுகாத்து கவனம் செலுத்த வேண்டும்.
மக்களுக்கான பாதுகாப்பு திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை மேற்கொள்ளவில்லை இதனால் பல உயிர்கள் இழக்கப்படுகிறது.
தற்போது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த மக்கள் அவர்களுக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளனர் என குறிப்பிட்டனர்.
