ஃபிளைதுபாய் விமான சம்பவத்தில் பயணிகளை காத்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் பிரதமர் மோடி இன்று (அக்.2) வீடியோ காலில் நலம் விசாரித்த நிலையில், “எனக்கு ஆபத்து அல்லது வலி ஏற்படும்போதெல்லாம் ஹனுமன் மந்திரத்தை தான் ஜெபிப்பேன்; விமான சம்பவத்தின் போதும் அதையே தொடர்ந்து ஜெபித்தேன்” என கேப்டன் ஸ்மித் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும், பிரதமரின் இந்த ஒரு தொலைபேசி அழைப்பு தமக்கு மிகுந்த பெருமையை அளித்துள்ளதாக துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் கேப்டன் ஸ்மித் நெகிழ்ச்சி
