அமெரிக்க அரசின் புதிய ‘America.gov’ இணையதள திறப்பு விழாவில் பேசிய அதிபர் டிரம்ப், ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கும் வகையில் அரசு விதிமுறைகளை கொண்டுவர கூடாது என்றும், நிறுவனங்களே தங்களை சுயகட்டுப்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவறாக பயன்படுத்துபவர்களை தடுக்க ஏற்கனவே உள்ள அரசு அமைப்புகளே போதுமானவை என்று கூறிய அவர், ஏ.ஐ. தொழில்முனைவோரிடம் பாதுகாப்பான பயன்பாட்டிற்கான உறுதிமொழியை பெற்றார். மேலும், ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுக்கு கடும் கட்டுப்பாடு வேண்டாம்: டிரம்ப்
