திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காந்தி ஜெயந்தி அன்று கள்ள சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சப்பானி முத்து என்ற நபரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்
நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது கடைகள் விடுமுறை விடப்பட்டது.
இதனை பயன்படுத்தி ஒரு சிலர் முன்கூட்டியே அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வைத்து கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு கொடுப்பதற்காக பல இடங்களில் வாங்கி வைத்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி திருநெடுங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சண்முக மகன் சப்பானி முத்து (36) என்பவர் கள்ள சந்தையில் விற்பதற்காக அரசு மதுபான பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பது குறித்து துவாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு எஸ் ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சப்பாணி முத்து வீட்டை சோதனையிட்ட பொழுது அவரது வீட்டில் ஓல்டு சீப்பு 91 பாட்டில்களும் டைமண்ட் 15 பாட்டில் என மொத்தம் 106 மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்ததோடு சப்பானி முத்துவையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
