Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரதநாட்டியம் ஆடியபடி 540 படிகள் ஏறிய மாணவி – உலக சாதனை முயற்சி

திருச்சியில் பரதநாட்டியம் ஆடியபடி 540 படிகள் ஏறிய மாணவி – உலக சாதனை முயற்சி

திருச்சி மாவட்டம், முசிறியில் நிதிலாலயா இசை மற்றும் நடனப் பள்ளியின் 28-வது ஆண்டு விழாவை முன்னிட்டு உலக சாதனை முயற்சி நடைபெற்றது. மணமேடு பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி கனிகா, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முசிறி நிதிலாலயா பரதநாட்டியப்

பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், பஞ்சபூதங்களில் ஆகாயத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ மரகதா சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள திருஈங்கோய்மலை உச்சிக்கு

பரதநாட்டிய அசைவுகளுடன் சென்றார். செங்குத்தாகவும், கரடு முரடாகவும் அமைந்துள்ள 540 படிகளையும் மலை அடிவாரத்திலிருந்து கடந்து உச்சியை அடைந்தார். உலக சாதனை

புத்தகத்தில் இடம்பெறும் வகையில் நடைபெற்ற இம்முயற்சியை சாதனை நடுவர்கள் நேரில் பார்வையிட்டனர். உடன் கனிகாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் சென்று ஊக்கப்படுத்தினர்..

error: Content is protected !!