Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஊழல் வழக்கில் சிக்கும் அரசு ஊழியரை சாதாரணமாக கருத முடியாது

ஊழல் வழக்கில் சிக்கும் அரசு ஊழியரை சாதாரணமாக கருத முடியாது

மதுரை: பணியில் இருக்கும் அரசு ஊழியர் ஊழல் வழக்கில் சிக்குவதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. லஞ்சம் பெற்ற புகாரில் சுனிதா அகிலின் மெபெல், இட்டுராஜ், கணேசமூர்த்தி, ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்களான இட்டுராஜ், கணேசமூர்த்தி உட்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது; பணியில் இருக்கும் அரசு ஊழியர் ஊழல் வழக்கில் சிக்குவதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. குற்றப் பின்னணி உள்ளவர்கள் அரசு பணியில் நுழைவது நிர்வாகத்தின் தூய்மையை பாதிக்கும். ஊழலில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்தால் மற்ற அதிகாரிகளுக்கும் பயத்தை தரும். நடத்தை விதியை மீறி ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!