நைஜீரிய நாட்டின் விமானப் படைக்கு சொந்தமான ஏடிஆர் 42 ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர். ஒண்டோ மாகாணத்தில் உள்ள இக்போகோடா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 25 பயணிகள் மற்றும் விமானிகள், 7 பணியாளர்கள் உள்ளிட்ட 32 பேரும் உயிரழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவம், மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நைஜீரிய விமான விபத்தில் 32 பேர் பலி
