மதுராந்தகம் இடைத்தேர்தல் – செய்தியாளர்களுக்கு மிரட்டல்.. வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பழமந்தூர் வாக்குச்சாவடி மையத்தில், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம், அப்பகுதியைச் சேர்ந்த திமுக கிளை நிர்வாகி ஒருவர் வாக்குச்சாவடி மையத்திற்குள் வரக்கூடாது, செய்தியாளர்கள் ஆளுங்கட்சிக்கியைச் சார்ந்தவர்கள் செய்தி சேகரிக்கக் கூடாது எனக் கூறி வெளியே செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
