தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 27-ம் தேதி நடத்திய குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை இன்று (அக்,6) வெளியிட்டுள்ளது. இத்தேர்வெழுதிய தேர்வர்கள் விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது தவறுகள் இருந்தால், அவற்றை உரிய ஆதாரங்களுடன் அக்.13-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் ஆட்சேபனைகளை வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்த பிறகே இறுதி விடைக்குறிப்புகள் மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
TNPSC குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு
